"கொரோனா இல்லை என்று நினைக்க வேண்டாம்" - தமிழிசை சவுந்தரராஜன்
குழந்தைகளை பெற்றோர்கள் அழைத்துச் சென்று தடுப்பூசி செலுத்த வேண்டுமென்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம்,
குழந்தைகளை பெற்றோர்கள் அழைத்துச் சென்று தடுப்பூசி செலுத்த வேண்டுமென்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
அனைவரும் தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா இல்லையே என்று நினைக்க வேண்டாம் தடுப்பூசி போட்டுக்கொண்டதால் தான் கொரோனா இல்லை. அதுபோல 60 வயதுக்கு மேற்பட்டோர், இணைநோய் உள்ளவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்.
குழந்தைகளை பெற்றோர்கள் அழைத்துச் சென்று தடுப்பூசி போட வேண்டும். ஏனென்றால் பெரியவர்களில் 80 முதல் 85 சதவீத பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளோம். குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி இல்லையென்றால் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும்.
பிரதமரின் ஊக்கத்தினாலும் மாநில அரசுகளின் முன்னெடுப்பினாலும் பெரியவர்களில் 80 முதல் 85 சதவீத பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story