‘குழந்தைகள் தத்தெடுப்பு திட்டம்’ கோரி பொதுநல மனு: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
குழந்தைகள் தத்தெடுப்பு திட்டம் கோரிய பொதுநல மனு மீது மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
புதுடெல்லி,
மும்பையைச் சேர்ந்த ‘டெம்பிள் ஆஃப் ஈலிங்' அமைப்பு, சுப்ரீம் கோர்ட்டில் குழந்தைகள் தத்தெடுப்பு திட்டத்தை உருவாக்க கோரி பொதுநல மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது பொதுநல மனு தொடர்பாக அமைப்பின் செயலாளரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
‘டெம்பிள் ஆப் ஈலிங்' அமைப்பின் செயலாளர் பியூஷ் சக்ஸேனா, குழந்தைகளை தத்தெடுக்க விரும்பும் பெற்றோர் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் எதிர்கொள்ளும் சிக்கல்களைக் கருத்தில்கொண்டு இந்த பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார்.
இதை ஏற்ற நீதிபதிகள், குழந்தைகள் தத்தெடுப்பு திட்டத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்தியதுடன், இந்த பொதுநல மனு தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story