ஆந்திரா; தண்டவாளத்தை கடக்க முயன்ற பயணிகள் மீது ரெயில் மோதியதில் 5 பேர் உயிரிழப்பு!


ஆந்திரா; தண்டவாளத்தை கடக்க முயன்ற பயணிகள் மீது ரெயில் மோதியதில் 5 பேர் உயிரிழப்பு!
x
தினத்தந்தி 12 April 2022 9:24 AM IST (Updated: 12 April 2022 9:24 AM IST)
t-max-icont-min-icon

பயணிகள் மீது எதிரே வந்த கோனார்க் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி விபத்து ஏற்பட்டது.

ஸ்ரீகாகுளம், 

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள படுவா கிராமம் அருகே கோனார்க் எக்ஸ்பிரஸ் மோதியதில் 5 பயணிகள் உயிரிழந்தனர்.

கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து இறங்க முயன்ற பயணிகள் மீது எதிரே வந்த கோனார்க் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி விபத்து ஏற்பட்டது. நேற்றிரவு இந்த விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது, “கவுகாத்தி விரைவு வண்டியில் பயணித்த 5 பேர்,  சங்கிலியை பிடித்து இழுத்ததால் அந்த ரெயில் பாதியில்  நிறுத்தப்பட்டது. உடனே 5 பயணிகளும் ரெயிலில் இருந்து கீழே குதித்து தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளனர். 

அப்போது எதிரே வந்த கோனார்க் எக்ஸ்பிரஸ் ரெயில் அவர்கள் மீது மோதியது. அதில் சம்பவ இடத்திலேயே அவர்கள் அனைவரும் உயிரிழந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டது.

Next Story