முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி..!!


Image Courtesy: Ministry of Defence
x
Image Courtesy: Ministry of Defence
தினத்தந்தி 12 April 2022 10:39 AM IST (Updated: 12 April 2022 10:39 AM IST)
t-max-icont-min-icon

முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக மத்திய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி, 

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டி.ஆர்.டி.ஓ.) தயாரிப்பான ஹெலினா ஏவுகணை ஹெலிகாப்டரில் இருந்து எதிரிகளின் பீரங்கிகளை தாக்கி அழிக்கும் வல்லமை படைத்ததாகும். திறன் மதிப்பாய்வின் ஒரு பகுதியாக இந்த ஏவுகணையை டி.ஆர்.டி.ஓ. அவ்வப்போது சோதித்து வருகிறது. 

அந்த வகையில் நேற்று ஹெலினா ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக மத்திய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானப்படை ஆகியவற்றின் விஞ்ஞானிகள் குழுக்களால் கூட்டாக ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டரில் இருந்து வீசப்பட்ட ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. இந்த ஏவுகணை உலகின் மிகவும் மேம்பட்ட பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்களில் ஒன்றாகும்” என கூறப்பட்டுள்ளது.

Next Story