திருப்பதி கோயிலுக்கு செல்ல இலவச டோக்கன்: கூட்டத்தில் சிக்கிய பக்தர்களுக்கு மூச்சுத் திணறல்
திருப்பதி கோவிலுக்கு செல்ல தரிசன டோக்கன் பெற வந்த பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
திருப்பதி,
திருப்பதி கோவிலிலுக்கு செல்ல இலவச டோக்கன் பெற வந்த பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், 10 க்கும் மேற்பட்டோருக்கு சிறிய காயங்களுடன் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
திருப்பதியில் மூன்று இடங்களில் இன்று இலவச டோக்கன் வழங்கப்பட்டது. கடந்த இரு தினங்களாக இலவச டோக்கன் வழங்கப்படாத நிலையில், இன்று இலவச டோக்கனை பெற அதிகமான பக்தர்கள் ஒரே நேரத்தில் டோக்கன் வழங்கும் இடத்தில் கூடினர்.
பலர் முண்டியடித்துக்கொண்டு இலவச டோக்கன் பெற முயன்றனர். இதனால், குழந்தைகளுடன் வந்தவர்கள் மற்றும் வயதானவர்களில் ஒருசிலர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.
உடனடியாக இதனை கவனித்த தேவஸ்தான ஊழியர்கள் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து பத்திரமாக அனுப்பிவைத்தனர்.
Related Tags :
Next Story