கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தும் வகையில் புதிய கொள்கை வெளியிடப்படும் - அமித்ஷா


கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தும் வகையில் புதிய கொள்கை வெளியிடப்படும் - அமித்ஷா
x
தினத்தந்தி 13 April 2022 12:32 AM IST (Updated: 13 April 2022 12:32 AM IST)
t-max-icont-min-icon

மாநில கூட்டுறவுச் சங்கங்களின் செயல்பாட்டில் தலையிட மத்திய அரசு விரும்பவில்லை என அமித்ஷா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

கூட்டுறவு கொள்கை குறித்த 2 நாள் தேசிய மாநாடு டெல்லியில் நடைபெறுகிறது. கூட்டுறவுகளின் தற்போதைய சட்டக் கட்டமைப்பு, ஒழுங்குமுறைக் கொள்கைகளை அடையாளம் காண்பது, செயல்பாட்டுத் தடைகள், நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கான சீர்திருத்தங்கள் உள்ளிட்டவை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.

மாநாட்டில் உரையாற்றிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மாநில கூட்டுறவுச் சங்கங்களின் செயல்பாட்டில் மத்திய அரசு தலையிட விரும்பவில்லை என கூறினார். பேச்சுவார்த்தை மற்றும் ஒருங்கிணைப்பு மூலம் மாநிலச் கூட்டுறவு சட்டங்களில் சீரான தன்மையைக் கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

நாட்டின் தற்போதைய சவால்களை எதிர்கொள்ளும் வகையில் கூட்டுறவு அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்த அவர், அடுத்த 9 மாதங்களில் புதிய கூட்டுறவு ஒத்துழைப்புக் கொள்கை தயாராகிவிடும் என்றும் இதில் பல சீர்திருத்தங்கள் தேவை என்பதால் பங்குதாரர்கள் தங்கள் ஆலோசனைகளை அமைச்சகத்தின் இணையதளத்தில் அனுப்பி வைக்கலாம் என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார். 

Next Story