17 மாதங்களில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் 6.95 சதவீதமாக உயர்வு..!!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 13 April 2022 8:42 AM IST (Updated: 13 April 2022 8:42 AM IST)
t-max-icont-min-icon

17 மாதங்களில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் 6.95 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

கடந்த மார்ச் மாதத்தில், நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையிலான சில்லரை பணவீக்க விகிதம் 6.95 சதவீதமாக இருந்தது. தேசிய புள்ளியியல் அலுவலகம் இதை தெரிவித்துள்ளது.

கடந்த 17 மாதங்களில் இதுதான் அதிகபட்ச பணவீக்கம் ஆகும். தொடர்ந்து 3-வது மாதமாக, 6 சதவீதத்துக்கு மேல் பணவீக்கம் பதிவாகி வருகிறது.

கடந்த ஆண்டு இதே மார்ச் மாதத்தில், பணவீக்கம் 5.52 சதவீதம்தான் இருந்தது. தற்போது, உணவு பொருட்கள், பால் பொருட்கள், ஆடைகள், வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்தின் விலையும் உயர்ந்ததுதான், பணவீக்க உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.


Next Story