வட மாநிலங்களில் வெயிலின் கடுமையான தாக்கம் குறைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்
இந்தியாவில் கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத வெப்பம் நடப்பு ஆண்டு பதிவாகியுள்ளது.
புதுடெல்லி,
வட இந்தியாவில் வாட்டி வதைத்த வெயிலின் தாக்கம் சற்று தணிந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்ப நிலை வரும் நாட்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி ஆர்.கே ஜெனமனி கூறியதாவது;-
வெப்ப அலையின் தீவிர தாக்கம் முடிவுக்கு வந்துவிட்டது. ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், பஞ்சாப், அரியானா, டெல்லி, இமாசல பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் வெப்ப அலை குறையத்தொடங்கும். டெல்லியில் ஏப்ரல் 9,10,11 ஆம் தேதிகளில் கடுமையான வெப்பம் வாட்டி வதைத்தது. கடந்த 72 ஆண்டுகளில் முதல் 15 நாட்களில் பதிவான அதிகபட்ச வெப்பம் அதுவேயாகும்.
மேகக்கூட்டங்கள் அதிகரித்துள்ளதால் டெல்லி, பஞ்சாப்,ராஜஸ்தான், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப நிலை 2-3 டிகிரி செல்சியஸ் குறையத்தொடங்கும். கடந்த 50 நாட்களாக மழைப்பொழிவு இல்லததால், இந்தியாவில் கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத வெப்பம் நடப்பு ஆண்டு பதிவாகியுள்ளது. ஏப்ரல் 16 ஆம் தேதி வாக்கில் ராஜஸ்தானில் வெப்ப நிலை அதிகரிக்கலாம்” என்றார்.
Related Tags :
Next Story