ரசாயன கசிவால் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - 6 பேர் பலி
தொழிற்சாலையில் ரசாயன கசிவால் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.
அமராவதி,
ஆந்திர மாநிலம் எலுரு மாவட்டம் அக்கிரெட்டிகுடிம் என்ற பகுதியில் ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் பல்வேறு ரசாயனங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அந்த ரசாயன தொழிற்சாலையில் நேற்று இரவு பணியாளர்கள் வழக்கமான பணிகளை மேற்கொண்டு வந்தனர். அப்போது, தொழிற்சாலையில் இருந்து திடீரென ரசாயன கசிவு ஏற்பட்டது. நைட்ரிக் அமிலம், மோனோமெத்தனால் உள்ளிட்ட ரசாயனங்கள் கசித்ததால் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ தொழிற்சாலை முழுவதும் வேகமாக பரவியது.
இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆனாலும், இந்த தீ விபத்தில் தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருந்த 6 பணியாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 12 பேர் உயிரிழந்தனர். இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story