மும்பை விமான நிலையத்தில் ரூ.24 கோடி மதிப்பிலான ஹெராயின் கடத்தல்


மும்பை விமான நிலையத்தில் ரூ.24 கோடி மதிப்பிலான ஹெராயின் கடத்தல்
x
தினத்தந்தி 14 April 2022 1:20 PM IST (Updated: 14 April 2022 1:20 PM IST)
t-max-icont-min-icon

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.24 கோடி மதிப்பிலான ஹெராயினை கடத்திய தென்ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.



மும்பை,



மராட்டியத்தின் மும்பை நகரில் உள்ள சத்ரபதி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு போதை பொருளை கடத்தி கொண்டு நபர் ஒருவர் வருகிறார் என கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, போதை பொருள் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உடனடியாக சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.

இதில், சிவப்பு நிற பை ஒன்றை தள்ளி கொண்டு வந்த தென்ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த நபரை சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர்.

அந்த பையில், 4 போதை பொருள் பொட்டலங்கள் வைக்கப்பட்டு இருந்துள்ளன.  அவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.  அதுபற்றிய விசாரணையில், ஹெராயின் வகை போதை பொருள் என தெரிய வந்தது.  அதன் எடை 3.980 கிலோ இருந்தது.

இதன் சர்வதேச மதிப்பு ரூ.24 இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.  அந்த நபரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.




Next Story