"மாணவர்கள் இனி ஒரே நேரத்தில் 2 படிப்புகளை பயிலலாம்" - யுஜிசி அறிவிப்பு
மாணவர்கள் ஒரே நேரத்தில் 2 படிப்புகளை முழுநேரமாக படிக்க பல்கலைக்கழக மானியக்குழு அனுமதி அளித்துள்ளது.
புதுடெல்லி,
மாணவர்கள் ஒரே நேரத்தில் 2 படிப்புகளை முழுநேரமாக படிக்க பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் ஒரு மாணவர் ஒரே நேரத்தில் இரண்டு இளங்கலைப்படிப்புகளை அல்லது இரண்டு முதுகலைப் பட்டப்படிப்புகளை படிக்க முடியும்.
அதே போல், பட்டப்படிப்புடன் பட்டயப்படிப்பையும் சேர்ந்து படிக்க இயலும். இருப்பினும், மாணவர்கள் ஒரே நேரத்தில் பலதரப்பட்ட கல்விகளை பயிலும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற தேசிய கல்விக் கொள்கையின் அம்சத்தை அனுசரித்து இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story