'ஒரு குடம் நீருக்காக உயிரை பணயம் வைக்கும் பெண்கள்' - தண்ணீருக்காக தவிக்கும் மக்கள்
மராட்டியத்தில் பெண்கள் ஆழமான கிணற்றில் உயிரை பணயம் வைத்து கயிரை பிடித்துக்கொண்டு தண்ணீர் எடுக்கின்றனர்.
மும்பை,
மராட்டிய மாநிலம் நாசிக்கில் நிலவும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக அங்குள்ள பெண்கள் உயிரை பணயம் வைத்து கிணற்றில் இறங்கி தண்ணீர் எடுத்து வருகின்றனர்.
கிராமத்திற்கு அருகே உள்ள கிணற்றில் மட்டுமே தண்ணீர் இருப்பதால், இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்துவரும் சூழல் நிலவுகிறது. சில பெண்கள் ஆழமான கிணற்றில் உயிரை பணயம் வைத்து கயிரை பிடித்துக்கொண்டு தண்ணீர் எடுக்கின்றனர்.
மேலும், பெண் குழந்தைகளும் தண்ணீருக்காக கிணற்றின் அருகே நிற்பதால், அவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Related Tags :
Next Story