டெல்லியில் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி..!
தலைநகா் டெல்லியில் திடீரென கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா 3-வது அலை ஓய்ந்து வந்த நிலையில் தலைநகா் டெல்லியில் திடீரென கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இதற்கிடையே இந்தியாவில் கொரோனாவின் அடுத்த அலை தாக்காமல் இருக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தனியார் ஆஸ்பத்திரிகளில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகளின் முன்னெச்சரிக்கை டோஸ் (பூஸ்டர்) செலுத்தும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.
தலைநகர் டெல்லியிலும் கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சாிக்கை 3-வது டோஸ் செலுத்தும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. விரைவில் டெல்லி அரசு ஆஸ்பத்திரிகளில் இதற்கான மருந்துகள் இலவசமாக வினியோகிக்கப்படும் என்று நேற்று டெல்லி அரசு அறிக்கை வெளியிட்டு உள்ளது.
Related Tags :
Next Story