“உப்பள்ளி வன்முறை கண்டிக்கத்தக்கது, அரசு சகித்து கொண்டு வேடிக்கை பார்க்காது” - எடியூரப்பா பேட்டி
வன்முறையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
விஜயநகர்,
விஜயநகர் மாவட்டம் ஒசப்பேட்டேயில் நேற்று முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களிடம் கூறியதாவது:-
“உப்பள்ளியில் போலீசார் மீது கற்களை வீசி தாக்கி, அரசு சொத்துகளை சேதப்படுத்தி வன்முறையில் ஈடுபட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற வன்முறையை அரசு சகித்து கொண்டு வேடிக்கை பார்க்காது. வன்முறையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
வன்முறைக்கு காரணமானவர்கள் யாரும் தப்பிக்க முடியாது. வன்முறை பற்றி நியாயமான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். வன்முறையில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். வன்முறைக்கு காரணமானவர்களும் கைது செய்யப்படுவார்கள்.
உப்பள்ளி மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்து, முஸ்லிம் என்ற வேறுபாடுகள் இருக்க கூடாது. சமுதாயத்தில் அமைதி நிலவ வேண்டும். மக்கள் அமைதியாக வாழ வேண்டும். சட்டத்தை யாரும் கையில் எடுக்க கூடாது. சட்டத்தை விட பெரியவர்கள் யாரும் இல்லை.”
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
Related Tags :
Next Story