சர்க்கரை ஏற்றுமதி 2021-22ல் 90 லட்சம் டன்களைத் தொடும்: தகவல்
செப்டம்பர் மாதத்துடன் முடிவடையும் நடப்பு சந்தை ஆண்டில் சர்க்கரை ஏற்றுமதி 90 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
செப்டம்பர் மாதத்துடன் முடிவடையும் சந்தைப்படுத்தல் ஆண்டில் சர்க்கரை ஏற்றுமதி 90 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சந்தை அறிக்கைகள் மற்றும் துறைமுகத் தகவல்களின்படி, இதுவரை சுமார் 80 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதில், அக்டோபர் 2021-மார்ச் 2022 காலகட்டத்தில், சுமார் 57.17 லட்சம் டன் சர்க்கரை நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சந்தை ஆண்டில் இதே காலகட்டத்தில் சுமார் 31.85 லட்சம் டன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்று சர்க்கரை ஆலைகள் சங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 2022ல் சுமார் 7-8 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு ஆண்டில், முக்கிய ஏற்றுமதி நாடுகளாக இந்தோனேசியா மற்றும் பங்களாதேஷ் உள்ளது. இது மொத்த ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 44 சதவீதத்தை கொண்டுள்ளது.
2021-22 சந்தைப்படுத்தல் ஆண்டிற்கான அதன் உற்பத்தி மதிப்பீட்டை 350 லட்சம் டன்களாக மாற்றியுள்ளதாக சர்க்கரை ஆலைகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் ஏற்றுமதியையும் 90 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.
உள்நாட்டு நுகர்வு 272 லட்சம் டன்களைக் கணக்கில் கொண்டால், செப்டம்பர் 30, 2022 அன்று சர்க்கரைப் பருவத்தின் முடிவில் 68 லட்சம் டன்கள் இறுதி இருப்பு இருக்கும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், உணவுத்துறை செயலர் சுதன்ஷு பாண்டே, செப்டம்பர் மாதத்துடன் முடிவடையும் 2021-22 சந்தைப்படுத்தல் ஆண்டில் இந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி முந்தைய ஆண்டின் அளவை விட 80 லட்சம் டன்களைத் தாண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story