டெல்லி ஜஹாங்கீர்புரி வன்முறை: முக்கிய குற்றவாளிகளுக்கு மேலும் 2 நாள் போலீஸ் காவல் நீட்டிப்பு!
முக்கிய குற்றவாளிகளான அஸ்லாம் மற்றும் அன்சாருக்கு மேலும் 2 நாள் போலீஸ் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
டெல்லி ஜஹாங்கீர்புரியில் கடந்த சனிக்கிழமை அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது இரு பிரிவினர் இடையே மோதல் வெடித்தது. இதில் 9 பேர் படுகாயம் அடைந்தனர். .
வன்முறை தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்ப்பட்ட 14 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வன்முறை வழக்கில் கைதான 14 பேரில் 12 பேருக்கு நீதிமன்றக்காவல் அளித்து உத்தரவிட்டது. மேலும், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் இருவருக்கு ஒரு நாள் போலீஸ் காவலில் வைக்க டெல்லி ரோகினி நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக விளங்கும் அஸ்லாம் மற்றும் அன்சாருக்கு ஒரு நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்ட நிலையில், மேலும் 2 நாள் போலீஸ் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story