பா.ஜனதா நாட்டில் மத கலவரத்தை உருவாக்க முயற்சி செய்கிறது- சரத்பவார் குற்றச்சாட்டு


பா.ஜனதா நாட்டில் மத கலவரத்தை உருவாக்க முயற்சி செய்கிறது- சரத்பவார் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 19 April 2022 7:12 PM IST (Updated: 19 April 2022 7:12 PM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா நாட்டில் மத கலவரத்தை உருவாக்க முயற்சி செய்வதாக சரத்பவார் குற்றம்சாட்டி உள்ளார்.

மும்பை,

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- பா.ஜனதாவும் அதன் சில கூட்டணி கட்சிகள் நாட்டில் மத கலவரத்தை உருவாக்க முயற்சி செய்கின்றன. நாங்கள் இதுபற்றி மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை செய்து அவர்கள் இடையே நல்லிணக்கத்தை உருவாக்க முயற்சி செய்கிறோம்.

பா.ஜனதாவுக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைக்க பல தலைவர்கள் விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளனர். மம்தா பானர்ஜி இதுதொடர்பாக கடிதம் எழுதி உள்ளார். இந்த விஷயத்தை நானும், உத்தவ் தாக்கரேவும் முன்னின்று தொடங்க வேண்டும் என அவர் எதிர்பார்க்கிறார். 

மற்ற தலைவர்களுடன் பேசிவிட்டு இதுதொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும். பா.ஜனதாவுக்கு எதிரான கட்சிகளின் கூட்டத்தை நடத்த தேதி எதுவும் முடிவு செய்யப்படவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story