ராஜஸ்தானில் நிகழ்ந்த சாலை விபத்தில் 11 பேர் பலி: ஜனாதிபதி இரங்கல்
ராஜஸ்தானில் சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில் கோட்ஜி நெடுஞ்சாலையில் பிக்கப் வாகனத்தில் 20 பேர் வீடு திரும்பிக்கொண்டிந்தனர். அப்போது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர்-டிரெய்லர் மீது பிக்கப் வாகனம் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில் ராஜஸ்தானில் சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “ராஜஸ்தானின் ஜுன்ஜுனுவில் நடந்த சாலை விபத்தில் பலர் இறந்ததைக் கேட்டு நான் மிகவும் துயரமடைந்தேன். இந்த விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று அதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்தியில் பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story