கழிவறையில் பிரசவம்; டாய்லெட்டில் சிக்கிய குழந்தை


கழிவறையில் பிரசவம்; டாய்லெட்டில் சிக்கிய குழந்தை
x
தினத்தந்தி 20 April 2022 3:29 PM IST (Updated: 20 April 2022 3:29 PM IST)
t-max-icont-min-icon

பெண் ஒருவர் கழிவறையை பயன்படுத்தும் போது திடீரென குழந்தையைப் பெற்றெடுத்தார். மலம் கழிக்க சென்ற அவருக்கு கழிப்பறையில் பிரசவம் ஆகியுள்ளது.

அகமதாபாத்

பெண் ஒருவர் கழிவறையை பயன்படுத்தும் போது திடீரென குழந்தையைப் பெற்றெடுத்தார். மலம் கழிக்க சென்ற அவருக்கு கழிப்பறையில் பிரசவம் ஆகியுள்ளது. குஜராத் மாநிலம்  அகமதாபாத்தில்  நடந்த இந்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அந்த பெண் அகமதாபாத்தில் உள்ள பெண்கள் பாதுகாப்பு மேம்பாட்டு இல்லத்தில் வசித்து வந்தவர்.

மனநிலை சரியில்லாத இந்த பெண் கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்தார். பிரசவத்தில் பிறந்த குழந்தை டாய்லெட்டில் சிக்கிக்கொண்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும் பாதுகாப்பு இல்லத்தை சேர்ந்தவர்கள், தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையின் உயிரைக் காப்பாற்றினர்.

Next Story