ராணுவத்தில் நடந்த சைபர் பாதுகாப்பு மீறல் - தீவிர கண்காணிப்பில் ராணுவ அதிகாரிகள்!
பாதுகாப்பு மீறல் பாகிஸ்தானின் உளவு முயற்சியாக இருக்கலாம் என்ற கண்ணோட்டத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
புதுடெல்லி,
இந்திய ராணுவ அதிகாரிகள் வாட்ஸ் ஆப் குழுவில் கடுமையான சைபர் பாதுகாப்பு மீறல் நடைபெற்றுள்ளதை உளவுத்துறை உறுதி செய்துள்ளது.
இந்தியாவின் அண்டை நாடுகளாக விளங்கும் சீனா மற்றும் பாகிஸ்தானின் உளவு அமைப்புகள், இந்திய ராணுவ வீரர்களிடம் இருந்து ராணுவ தகவல்களை கசியவிட முயன்றதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் பெரும்பாலும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்துள்ளன. எனினும், சில ராணுவ அதிகாரிகள் அவர்களின் வலையில் சிக்கி விடுகின்றனர் என்று பாதுகாப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இணைய பாதுகாப்பு மீறல் பாகிஸ்தானின் உளவு முயற்சியாக இருக்கலாம் என்ற கண்ணோட்டத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், பாகிஸ்தான் மற்றும் சீனாவின் புலனாய்வு அமைப்புகளால் ஆன்லைனில் குறிவைக்கப்படும் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானிய ஏஜெண்டுகள் தங்களை பெண்களாகக் காட்டிக் கொண்டு, இந்திய ராணுவ வீரர்களை தங்கள் மோக வலையில் சிக்க வைக்க முயன்றுள்ளனர். அப்படி சில அதிகாரிகள் மாட்டியிருக்கிறார்கள்.
சில வாட்ஸ்அப் குரூப்கள் மூலம் ரகசிய தகவல்கள் கசிந்துள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சைபர் பாதுகாப்பு மீறல்களில் சில ராணுவ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதற்கான அறிகுறிகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்வத்தில் தொடர்புடைய ராணுவ வீரர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற தொடர் சைபர் தாக்குதல் நடைபெற்று வருவதால், இந்திய ராணுவம் அதன் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு அலுவலக பணிகளுக்கு வாட்ஸ் ஆப் பயன்படுத்த வேண்டாம் என்று தெரிவித்துள்ளது. அவர்கள் முக்கியமான பணிகளை கையாளும் போது அவர்களுடைய முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்களை அழித்து விடுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
இந்திய கடற்படையும், தனது அனைத்து பணியாளர்களுக்கும் பேஸ்புக் பயன்படுத்த தடை விதித்துள்ளது. மேலும் ஸ்மார்ட் போன்களை தளங்கள் மற்றும் கப்பல்துறைகள் மற்றும் போர்க்கப்பல்களில் கொண்டு செல்ல வேண்டாம் என்றும் கடற்படை அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
Related Tags :
Next Story