மதம் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த மகன்: போலீசில் புகார் அளித்த தந்தை..!
சமூக வலைதளங்களில் மதம் குறித்து அவதூறான கருத்து தெரிவித்த சிறுவனை அவனது தந்தை போலீசில் புகார் செய்து சீர்திருத்த மையத்திற்கு அனுப்பியுள்ளார்.
கொல்கத்தா,
சமூக வலைதளங்களில் பிற மதம் குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்த 16 வயது மகனுக்கு எதிராக தந்தை போலீசில் புகார் அளித்து சிறுவர் சீர்திருத்த மையத்திற்கு அனுப்பியுள்ளார்.
மேற்கு வங்காளத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 16 வயது சிறுவன் ஒருவன், சமூக வலைதளங்களில் பிற மதம் குறித்து அவதூறான கருத்துக்களை பதிவிட்டுள்ளான். இந்த கருத்துகளைப் பார்த்த அந்த மதத்தைச் சேர்ந்த அக்கம்பக்கத்தினர் சிறுவனை அவனது தந்தையிடம் அழைத்துச் சென்று, இந்த இளம் வயதில் இப்படிப்பட்ட கருத்துகளை கூறுவது நல்லதல்ல என்று கூறியுள்ளனர்.
சிறுவனின் செயல் குறித்து அறிந்த சிறுவனின் தந்தை, கோபமடைந்து மகனை அடித்துள்ளார். மேலும் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார். இதையடுத்து அந்த குழு அந்த நபரிடம் உங்கள் மகன் பாடம் கற்றுக் கொண்டு விட்டான். உங்களது மகனை மன்னித்து விடுங்கள் என்று கூறியுள்ளனர்.
இருந்தாலும் சிறுவனின் தந்தை, அவன் மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்பதற்காக போலீசில் புகாரளித்துள்ளார். இதையடுத்து சிறுவனின் செல்போன் கைப்பற்றப்பட்டது. சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட, சிறுவன் தற்போது சிறுவர் சீர்திருத்த மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான்.
Related Tags :
Next Story