திரிபுரா: ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலால் 100க்கும் மேற்பட்ட பன்றிகள் உயிரிழப்பு!
திரிபுராவில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது.
அகர்தலா,
வடகிழக்கு மாநிலமான திரிபுராவில், ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது.
இந்த நிலையில், திரிபுராவில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட பன்றிகள் உயிரிழந்துள்ளன என்று அம்மாநில விலங்குகள் வளம் மற்றும் மேம்பாட்டுத்துறை மந்திரி பகபன் தாஸ் தெரிவித்தார்.
ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலால் இறந்த பன்றிகளின் உடல்கள் வரையறுக்கப்பட்ட இடத்தில் புதைக்கப்படுகின்றன. இன்னும் உயிருடன் இருக்கும் பன்றிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, பன்றிகளை பெருமளவில் கொல்லும் முடிவை விலங்குகள் மேம்பாட்டுத்துறை எடுத்துள்ளது என்று அவர் கூறினார்.
Related Tags :
Next Story