சீக்கியகுரு 400வது பிறந்தநாளையொட்டி சிறப்பு நாணயம், தபால் தலை வெளியீடு..!!


சீக்கியகுரு 400வது பிறந்தநாளையொட்டி சிறப்பு நாணயம், தபால் தலை வெளியீடு..!!
x
தினத்தந்தி 22 April 2022 12:18 AM IST (Updated: 22 April 2022 12:18 AM IST)
t-max-icont-min-icon

குரு தேஜ்பகதூரின் 400வது பிறந்த நாளையொட்டி சிறப்பு நாணயம், தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார்.

புதுடெல்லி,

டெல்லியில் சீக்கிய மத குரு தேஜ்பகதூர் உருவம் பதித்த ரூ.400 நாணயம், சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் 400வது பிரகாஷ் பூராப் கொண்டாட்டத்தை முன்னிட்டு நினைவு நாணயம் மற்றும் தபால் தலையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெளியிட்டார். 

இதனைத்தொடர்ந்து அந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, “இன்று நமது நாடு நமது குருக்களின் கொள்கைகளில் முழு ஈடுபாட்டுடன் முன்னேறி வருவதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த நல்ல சந்தர்ப்பத்தில், பத்து குருக்களின் பாதங்களில் வணங்குகிறேன். பிரகாஷ் பர்வ் விழாவில் உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஔரங்கசீப்பின் கொடுங்கோல் சிந்தனைக்கு முன்னால் குரு தேக் பகதூர் 'ஹிந்த் தி சதர்' ஆகி பாறையாக நின்றார். ஔரங்கசீப் பல தலைகளை துண்டித்தாலும் நம் நம்பிக்கையை அசைக்க முடியவில்லை என்பதற்கு இந்த செங்கோட்டையே சாட்சி. இந்தியா எந்த நாட்டிற்கும் சமூகத்திற்கும் அச்சுறுத்தலாக இருந்ததில்லை. இன்றும் நாம் முழு உலகத்தின் நலனைப் பற்றி சிந்திக்கிறோம்” என்று அவர் தெரிவித்தார். 


Next Story