இரட்டை இலை லஞ்ச வழக்கில் நான் நிரபராதி என்பதற்கான ஆவணங்களை சமர்ப்பித்தேன் - டிடிவி தினகரன்
இரட்டை இலை லஞ்ச வழக்கில் நான் நிரபராதி என்பதற்கான ஆவணங்களை சமர்ப்பித்தேன் என டிடிவி தினகரன் கூறினார்
புதுடெல்லி,
இரட்டை இலை சின்னத்துக்காக தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில், டி.டி.வி. தினகரனிடம் அமலாக்கத்துறை 21-ந்தேதி மீண்டும் விசாரணை நடத்துகிறது.
இரட்டை இலை சின்னம் பெறுவதற்கு தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி. தினகரன், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், மல்லிகார்ஜூனா கைது செய்யப்பட்டனர். மொத்தம் 9 பேர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இந்த வழக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகரை தவிர மீதமுள்ளவர்கள் ஜாமீனில் வெளியே உள்ளனர். இந்த விவகாரத்தில் நடந்த பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகளும் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்.
இதைப்போல கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் டி.டி.வி. தினகரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக கடந்த 12-ந்தேதி அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் மீண்டும் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.டெல்லி அலுவலகத்தில் 5 மணி நேர விசாரணை நடத்தப்பட்டது.
பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது ;
இரட்டை இலை லஞ்ச வழக்கில் நான் நிரபராதி என்பதற்கான ஆவணங்களை சமர்ப்பித்தேன் .சுகேஷின் வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தினர் என கூறினார்
Related Tags :
Next Story