20 கோடி தடுப்பூசிகள் விற்பனையாகவில்லை; தயாரிப்பை கடந்த ஆண்டே நிறுத்திவிட்டோம் - கோவிஷீல்டு தடுப்பூசி நிறுவனம்


20 கோடி தடுப்பூசிகள் விற்பனையாகவில்லை; தயாரிப்பை கடந்த ஆண்டே நிறுத்திவிட்டோம் - கோவிஷீல்டு தடுப்பூசி நிறுவனம்
x
தினத்தந்தி 23 April 2022 12:59 AM IST (Updated: 23 April 2022 12:59 AM IST)
t-max-icont-min-icon

20 கோடி தடுப்பூசிகள் விற்பனையாகாமல் கையிருப்பில் உள்ளதாக கோவிஷீல்டு தயாரிக்கும் சீரம் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மும்பை,

நாடு முழுவதும் இதுவரை 187 கோடியே 26 லட்சத்து 26 ஆயிரத்து 515 தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் மற்றும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், விற்பனையாகாமல் கோடி கணக்கில் தடுப்பூசி கையிருப்பில் உள்ளதால் உற்பத்தியை நிறுத்திவிட்டதாக கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதார் பூனாவாலா கூறுகையில், தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்ததையடுத்து விற்பனையாகாத கொரோனா தடுப்பூசிகள் அதிக அளவில் எங்களிடம் தற்போது கையிருப்பில் உள்ளது.

(கோவிஷீல்டு) தடுப்பூசி தயாரிக்கும் பணியை கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதியே நிறுத்திவிட்டோம். விற்பனையாகாத 20 கோடி தடுப்பூசிகள் எங்களிடம் உள்ளது. இந்த தடுப்பூசிகளை யாராவது இலவசமாக எடுத்துக்கொள்ளவும் நான் முன்வந்துள்ளேன். ஆனால், இது குறித்து இதுவரை எந்த விதமான நேர்மறையான பதில்களும் வரவில்லை' என்றார்.


Next Story