7-ம் வகுப்பு- ஆண்டு இறுதி தேர்வு வினாத்தாளை திருடிய மாணவர்கள் - மாநிலம் முழுவதும் தேர்வு நிறுத்தம்
7-ம் வகுப்பு இறுதியாண்டு தேர்வு வினாத்தாள் கசிந்ததையடுத்து மாநிலம் முழுவதும் தேர்வு நிறுத்தப்பட்டது.
காந்திநகர்,
குஜராத் மாநிலத்தில் 7-ம் வகுப்புக்கான அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான இறுதியாண்டு தேர்வு நேற்றும், இன்றும் நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில், அம்மாநிலத்தின் பவ்நகர் மாவட்டம் தலஜா தலுகா நஷ்வட் கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளியில் தேர்வுத்தாள் வைக்கப்பட்டிருந்த அறையின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை தலைமை ஆசிரியர் கண்டுபிடித்தார்.
மேலும், அந்த அறையில் வைக்கப்பட்டிருந்த அறிவியல், சமூக அறிவியல் தேர்வு வினாத்தாள்கள் எடுக்கப்பட்டிருப்பதையும் அவர் கண்டுபிடித்தார். இது குறித்து அவர் போலீசில் புகார் அளித்தார்.
புகாரை தொடர்ந்து அந்த பள்ளியில் படித்த 2 மாணவர்கள் வினாத்தாளை திருடியது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அந்த மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் வினாத்தாளை திருடியதை ஒப்புக்கொண்டனர்.
வினாத்தாள் திருடப்பட்டதை தொடர்ந்து நேற்றும், இன்றும் நடக்கவிருந்த 7-ம் வகுப்பு அறிவியல், சமூக அறிவியல் தேர்வுகளை குஜராத் அரசு மாநிலம் முழுவதும் ஒத்திவைத்தது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் வரும் 29 மற்றும் 30-ம் தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story