இந்தியா ரஷியாவை சார்ந்து இருப்பதை விரும்பவில்லை: அமெரிக்கா சொல்கிறது

இந்தியா ரஷியாவை  சார்ந்து இருப்பதை விரும்பவில்லை: அமெரிக்கா சொல்கிறது
x
தினத்தந்தி 23 April 2022 11:16 AM IST (Updated: 23 April 2022 11:21 AM IST)
t-max-icont-min-icon

இந்தியா தனது பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ரஷியாவை சார்ந்து இருப்பதில் அமெரிக்காவுக்கு விருப்பம் இல்லை என்று பெண்டகன் தெரிவித்துளது.

வாஷிங்டன்,

இந்தியா தனது பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ரஷியாவை சார்ந்து இருப்பதில் அமெரிக்காவுக்கு விருப்பம் இல்லை என்று பெண்டகன் தெரிவித்துளது. 

அமெரிக்காவின் ராணுவ தலைமையகமாக பெண்டகன் செய்தி  தொடர்பு செயலர் ஜான் கிர்பி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "பாதுகாப்புத் தேவைகளுக்காக ரஷ்யாவை நம்பியிருப்பதை நாங்கள்  விரும்பவில்லை என்பதை இந்தியா மற்றும் பிற நாடுகளுடன் தெளிவாக எடுத்துரைத்துள்ளோம். 

அதேநேரத்தில்,  இந்தியாவுடன் நாங்கள் கொண்டிருக்கும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மதிக்கிறோம்.  இதை மேம்படுத்துவதற்கான வழிகளையும் நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம் என்பதால், அது தொடர்ந்து நீடிக்கும்” என்றார். 

Next Story