புதுடெல்லி: ஓட்டல் உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று 400 ஓட்டல்களை மூடும் உத்தரவை ரத்து செய்ய முடிவு!


புதுடெல்லி: ஓட்டல் உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று 400 ஓட்டல்களை மூடும் உத்தரவை ரத்து செய்ய முடிவு!
x
தினத்தந்தி 23 April 2022 4:29 PM IST (Updated: 23 April 2022 4:29 PM IST)
t-max-icont-min-icon

ஓட்டல்களை மூடினால் அவர்கள் அனைவரும் வேலையை இழந்து தவிக்கும் நிலைமை நேரிடும்.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் உள்ள  பஹர்கஞ்ச், கரோல் பாக் பகுதியில் இருக்கும் 400 ஓட்டல்களை மூடும் அறிவிப்பை டெல்லி அரசு ரத்து செய்ய உள்ளது.

அப்பகுதியில் செயல்பட்டு வரும் 400 ஓட்டல்களை மூட டெல்லி மாசுக்கட்டுப்படு வாரியம் வழங்கிய நோட்டீசை ரத்து செய்ய உள்ளது.

இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட ஓட்டல் உரிமையாளர்கள் குழு ஒன்று, நேற்று டெல்லி சுற்றுச்சூழல் மந்திரி கோபால் ராயை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

மேலும் இந்த விவகாரத்தில், ஆளுங்கட்சியான ஆம் ஆத்மியை சேர்ந்த எம்.எல்.ஏ விஷ்வேஷ் ரவி,  மந்திரி கோபால் ராய்க்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது, “நான் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட வேண்டியுள்ளது. ஏனெனில் இந்த ஓட்டல்கள் ஏற்கெனவே மிகுந்த சிரமத்தில் உள்ளன. 

அந்த ஓட்டல்களில் அருகாமை பகுதியை சேர்ந்த பலர் வேலை செய்து வருகின்றனர். அந்த நோட்டீஸ் படி செயல்பட்டு, ஓட்டல்களை மூடினால் அவர்கள் அனைவரும் வேலையை இழந்து தவிக்கும் நிலைமை  நேரிடும்” என்று குறிப்பிட்டு ஓட்டல்களை திறக்க நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும், 10 ஓட்டல்கள் ஏற்கெனவே நிர்வாகத்தால் சீல் வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஓட்டல் உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று, ஓட்டல்களை மூடும் நோட்டீஸ் திரும்ப பெறப்பட்ட பின்னர், சீல் வைக்கப்பட்ட ஓட்டல்கள் மீண்டும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story