கொரோனா நிலைமை குறித்து புதன்கிழமை முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை..!
கொரோனா நிலைமை குறித்து வருகிற புதன்கிழமை பிரதமர் மோடி முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி,
மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,527- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,30,54,952 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 33- பேர் உயிரிழந்தனர். கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 15079 ஆக உயர்ந்துள்ளது. மேலும்
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இதுகுறித்து பிரதமர் மோடி வருகிற புதன்கிழமை அன்று முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துவார் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் இன்று தெரிவித்துள்ளன.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் விளக்கம் அளிப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story