இந்திய கடலோர காவல்படையில் ‘உர்ஜா பிரவாஹா’ புதிய கப்பல் சேர்ப்பு
கொச்சியில் உள்ள இந்திய கடலோர காவல்படையில் ‘உர்ஜா பிரவாஹா’ கப்பல் சேர்க்கப்பட்டது.
கொச்சி,
இந்திய கடலோர காவல்படையில் ‘உர்ஜா பிரவாஹா’ என்ற புதிய கப்பல் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் கொச்சியில் உள்ள இந்திய கடலோர காவல்படையில் சேர்க்கப்பட்டது. ஏற்கனவே 2017 முதல் பயன்பாட்டில் உள்ள உர்ஜா ஷ்ரோதா என்ற கப்பலுடன் இந்த கப்பலும் இனி பயன்படுத்தப்பட உள்ளது.
36 மீட்டர் நீளம் கொண்ட இந்த கப்பலில் சரக்கு கப்பல் எரிபொருள், விமான எரிபொருள் மற்றும் நன்னீர் ஆகியவற்றை கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் கடலில் இந்திய கடலோரா காவல்படையின் செயல்பாட்டுத் திறனை நிச்சயம் மேம்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story