‘தாய்மொழியை மறக்கக்கூடாது’ - உள்துறை மந்திரி அமித்ஷா வலியுறுத்தல்


‘தாய்மொழியை மறக்கக்கூடாது’ - உள்துறை மந்திரி அமித்ஷா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 24 April 2022 6:02 AM IST (Updated: 24 April 2022 6:02 AM IST)
t-max-icont-min-icon

பெற்றோர் தமது குழந்தைகள் தாய்மொழியில் பேச ஊக்குவிப்பதே நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் என அமித்ஷா கூறியுள்ளார்.

பாட்னா,

பீகார் மாநிலம் ரோத்தாசில் உள்ள கோபால் நாராயண் சிங் பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று பங்கேற்று பட்டங்களை வழங்கினார். இதன் பின்னர் அவர் பேசியதாவது;-

“ஒருவர் தாம் விரும்பும் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்கலாம். ஆனால் மக்கள் தமது தாய்மொழியை மறந்துவிடக்கூடாது. தாய்மொழியைப் பயன்படுத்துவதோடு, அதன் வளர்ச்சிக்கும் உதவ வேண்டும். தாய்மொழிதான் நாட்டின் வளர்ச்சிக்கும், வளமைக்கும் கைகொடுக்கும். 

பெற்றோர் தமது குழந்தைகள் தாய்மொழியில் பேச ஊக்குவிப்பதே நாட்டுக்குப் பெருமை சேர்க்கும். பிரதமர் மோடியின் முயற்சியால் இந்தியாவில் தற்போது பிற நாடுகளுடன் போட்டியிட முடிகிறது. இளைஞர்களுக்கான ‘ஸ்டார்ட்அப்’ போன்றவற்றுக்கான வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பிறரின் நலனுக்காக இளைஞர்கள் ஒத்துழைக்கவும், பாடுபடவும் வேண்டும்.”

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story