மும்பையில் பதற்றம்: போலீசார் முன்னிலையில் பா.ஜ.க தலைவர் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு!
மும்பையில் நேற்றிரவு போலீஸ் நிலையத்தில் பாஜக தலைவர் கிரித் சோமையா சிவசேனா கட்சியினரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மும்பை,
மும்பையில் நேற்றிரவு போலீஸ் நிலையத்தில் போலீசார் முன்னிலையில் பாஜக தலைவர் கிரித் சோமையா சிவசேனா கட்சியினரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மராட்டிய மாநில எம்எல்ஏ ரவி ராணா மற்றும் அவரது மனைவியும் அமராவதி எம்பியுமான நவ்நீத் கவுர், நேற்று மாலை கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து இந்த சம்பவம் மற்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அவர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவர், தாராவி பகுதியிலிருந்து அவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கும் கர் போலீஸ் ஸ்டேசன் சென்று போராட்டம் நடத்த போகிறேன். “அவர்கள் இருவரையும் சந்திப்பேன், என்னை யார் தடுக்கிறார்கள் ஏன்று பார்ப்போம்” என்று கூறியிருந்தார்.
இதனையடுத்து, அந்த போலீஸ் ஸ்டேசன் வளாகத்தில் இந்த அசம்பாவிதம் நடந்ததாக தெரிகிறது.
பாஜக தலைவர் கிரித் சோமையா தான் தாக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார். ஏறக்குறைய 100 சேனா தொண்டர்கள் அவரைத் தாக்கினர் எனவும் அவர்கள் தன்னைக் கொல்ல விரும்பினர் என்றும் கூறினார். போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார். ஆனால், அவரது புகார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது என்று போலீஸ் தர்ப்பில் கூறப்பட்டது.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து கிரித் சோமையா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,
“நான் அதிர்ச்சியடைந்தேன், 50 காவலர்கள் முன்னிலையில், கர் காவல் நிலைய வளாகத்தில், சிவசேனாவின் 100 தொண்டர்கள் என்னை கற்களால் தாக்கினர், அவர்கள் என்னைக் கொல்ல விரும்பினர்.
இத்தனை மாபியா சேனா கட்சியின் ரவுடிகள் காவல்நிலையத்தில் கூடுவதற்கு போலீஸ் அனுமதித்தது எப்படி? போலீஸ் கமிஷனர் என்ன செய்கிறார்? உத்தவ் தாக்கரேவின் ரவுடிகள் என்னை கொல்ல முயற்சிப்பது இது 3வது முறையாகும்” என்று ஆவேசமாக கூறினார்.
#WATCH | BJP leader Kirit Somaiya tweets, "Police let goons of CM Uddhava Thackeray assemble at Khar PS. When I got out, goons started stone pelting & broke my car's window, I got hurt as well. This matter is under police supervision."
— ANI (@ANI) April 23, 2022
(Video Source: Kirit Somaiya's Twitter) pic.twitter.com/9vPicFlkt9
மராட்டிய மாநில எம்எல்ஏ ரவி ராணா மற்றும் அவரது மனைவியும் அமராவதி எம்பியுமான நவ்நீத் கவுர் கைது செய்யப்பட்டதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து இந்த சம்பவம் மற்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவர், தாராவி பகுதியிலிருந்து அவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கும் கர் போலீஸ் ஸ்டேசன் வரை நடந்து போராட்டம் நடத்தினார். அப்போது போலீஸ் ஸ்டேசன் வளாகத்தில் இந்த அசம்பாவிதம் நடந்ததாக தெரிகிறது.
பிரதமர் மோடி இன்று மும்பைக்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வர உள்ள நிலையில், அங்கு பாஜகவுக்கும் ஆளும் சிவசேனாவுக்கும் மோதல் வெடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story