அமித் ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் போராட்டம்


அமித் ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் போராட்டம்
x
தினத்தந்தி 24 April 2022 1:56 PM IST (Updated: 24 April 2022 1:56 PM IST)
t-max-icont-min-icon

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி,

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக புதுச்சேரிக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில், அமித் ஷாவின் வருகைக்கு கருப்பு கொடு காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்று அறிவித்திருந்த எதிர்க்கட்சியினர், சாரம் திடலில் கோ பேக் அமித் ஷா என்ற பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த போராட்டத்தில் புதுச்சேரி முன்னாள் முதல் மந்திரி நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த போராட்டத்தின் போது போலீசார், போராட்டக்காரர்களிடம் இருந்த கருப்புக்கொடியை பறிக்க முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டது.


Next Story