குஜராத் கடற்கரை அருகே ரூ.280 கோடி மதிப்புள்ள போதைப் பொருளுடன் பிடிபட்ட பாகிஸ்தான் படகு
ரூ.280 கோடி மதிப்புள்ள போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு ஒன்று குஜராத் கடற்கரை அருகே பிடிபட்டது.
அகமதாபாத்,
இந்தியகடலோரக் காவல்படையினர் குஜராத் கடற்கரை அருகே பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பாகிஸ்தானை சேர்ந்த படகு ஒன்று இந்திய கடல் எல்லைக்குள் வந்துள்ளது.
இதையடுத்து அந்த படகை பிடித்து அதில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது, அதில் ரூ.280 கோடி மதிப்புள்ள ஹெரோயின் போதைப்பொருள் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து படகில் இருந்த ரூ.280 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்த அதிகாரிகள், படகுடன் சேர்த்து அதில் இருந்த 9 பேரையும் விசாரணைக்காக குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜக்காவ் துறைமுகத்திற்கு அழைத்துச்சென்றனர்.
Related Tags :
Next Story