கர்நாடக பள்ளியில் பைபிள் கட்டாயம்; இந்து அமைப்பு குற்றச்சாட்டு


கர்நாடக பள்ளியில் பைபிள் கட்டாயம்; இந்து அமைப்பு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 25 April 2022 4:48 PM IST (Updated: 25 April 2022 5:06 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடக பள்ளிக்கூடம் ஒன்றில் அனைத்து மாணவர்களும் தங்களுடன் பைபிளை கொண்டு வந்து, படிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



பெங்களூரு,



கர்நாடகாவில் உள்ள இந்து ஜனஜக்ருதி சமிதி அமைப்பின் மாநில செய்தி தொடர்பு அதிகாரி மோகன் கவுடா இன்று கூறும்போது, நகரில் உள்ள கிளாரென்ஸ் உயர்நிலை பள்ளியில் கிறிஸ்தவர்கள் அல்லாத மாணவர்களும் கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளை தங்களுடன் கட்டாயம் கொண்டு வர வேண்டும்.

அவர்கள் பைபிளை படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார்.  பள்ளி கூட நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு மதத்திற்கு எதிரான சதிச்செயல்.  இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 25 மற்றும் 30 ஆகியவற்றை மீறும் செயல் இது.

சுப்ரீம் கோர்ட்டு கூட பிற மதம் சார்ந்த குழந்தைகள் மீது மதம் சார்ந்த போதனைகளை ஒருவரும் திணிக்க கூடாது என்று தெரிவித்து உள்ளது.  அதனால், சுப்ரீம் கோர்ட்டையும் மதிக்காமல் விதிமீறிய செயலில் ஈடுபட்டு உள்ளனர் என கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.  அந்த குழந்தைகளின் பெற்றோரும் எங்களுடன் உள்ளனர்.  இதுபற்றி கர்நாடக கல்வி மந்திரியை சந்தித்து புகார் அளிக்கப்படும்.  அந்த பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தப்படும் என்று கூறியுள்ளார்.


Next Story