எல்.ஐ.சி. பங்குகள் விற்பனை - மே 4 ஆம் தேதி தொடங்கும் என தகவல்


எல்.ஐ.சி. பங்குகள் விற்பனை - மே 4 ஆம் தேதி தொடங்கும் என தகவல்
x
தினத்தந்தி 26 April 2022 10:39 AM IST (Updated: 26 April 2022 10:39 AM IST)
t-max-icont-min-icon

எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்கு விற்பனை வருகின்ற மே மாதம் 4 ஆம் தேதி தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுடெல்லி,

பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.யின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்கு விற்பனை வருகின்ற மே மாதம் 4 ஆம் தேதி தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னு ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எல்.ஐ.சி.யின் 3.5 சதவீத பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ள நிலையில், அதன் சந்தை மதிப்பு 21 ஆயிரம் கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story