டெல்லியில் தொடர்ந்து அதிகரிக்கும் வெப்பநிலை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 26 April 2022 9:24 PM IST (Updated: 26 April 2022 9:24 PM IST)
t-max-icont-min-icon

தேசிய தலைநகரின் பல பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 42 டிகிரிக்கு மேல் பதிவாகியுள்ளது

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் வெப்பநிலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தேசிய தலைநகரின் பல பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 42 டிகிரிக்கு மேல் பதிவாகியுள்ளது.

மேலும், ஏப்ரல் 28 முதல் தேசிய தலைநகரில் வெப்ப அலை வீசும் என மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், டெல்லியின் சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 46 டிகிரி செல்சியஸ் வரை கூட உயரக்கூடும் என்று வானிலை ஆய்வுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வடமேற்கு இந்தியா மற்றும் மத்திய இந்தியாவை சுற்றியுள்ள பகுதிகள் ஏப்ரல் மாதத்தில் அதிகப்படியான வெப்ப அலையை சந்திக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் முன்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 


Next Story