பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பெட்ரோல்-டீசல் விலையை குறைத்து முன்மாதிரியாக திகழ வேண்டும் - டி.கே.சிவக்குமார் தாக்கு
பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பெட்ரோல்-டீசல் விலையை குறைத்து முன்மாதிரியாக திகழ வேண்டும் என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். முதலில் பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் அதன் விலையை குறைத்து முன்மாதிரியாக திகழ வேண்டும். பா.ஜனதா மேலிடம், பெட்ரோலிய பொருட்களின் விலையை குறைக்கும்படி தங்கள் கட்சி ஆளும் மாநிலங்களுக்கு உத்தரவிட வேண்டும்.
போலீசார் தங்கள் விருப்பப்படி பணியாற்ற வேண்டும் என்று பா.ஜனதாவினர் நினைக்கிறார்கள். போலீசாரை தங்கள் கட்சியின் தொண்டர்களை போல் பயன்படுத்த பா.ஜனதா முயற்சி செய்கிறது. கலாசார காவலர்களின் அடாவடி செயல்களுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆதரவு அளித்துள்ளார்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
Related Tags :
Next Story