'லீவ்' போடாமல் லண்டன் 'டூர்' - வாட்ஸ் அப் கால் மூலம் தகவல் தெரிவித்த பெண் ஐபிஎஸ் அதிகாரி சஸ்பெண்ட்


லீவ் போடாமல் லண்டன் டூர் - வாட்ஸ் அப் கால் மூலம் தகவல் தெரிவித்த பெண் ஐபிஎஸ் அதிகாரி சஸ்பெண்ட்
x
தினத்தந்தி 28 April 2022 10:38 AM IST (Updated: 28 April 2022 10:38 AM IST)
t-max-icont-min-icon

முறைப்படை லீவ் போடாமல் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்ற பெண் ஐபிஎஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு துறையில் எஸ்.பி.யாக பணியாற்றி வந்தவர் அலங்கிரிதா சிங். 

இவர் கடந்த ஆண்டு பணியில் இருந்து முறைப்படி அதிகாரப்பூர்வமாக விடுமுறை எடுக்காமல் இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகருக்கு சுற்றுலா சென்றுள்ளார். 

கடந்த ஆண்டு அக்டோபர் 19-ம் தேதி தனது உயர் அதிகாரிக்கு அலங்கிரிதா வாட்ஸ் மூலம் வீடியோ கால் செய்து தான் தற்போது லண்டனில் இருப்பதாக நாளை (அக்.20) பணிக்கு வர முடியாது எனவும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அவர் பணிக்கு வராமல் இருந்துள்ளார்.

இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் விளக்கம் கோரி அலங்கிரிதாவுக்கு உத்தரபிரதேச உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் நோட்டீஸ் அனுப்பினார். 

இந்நிலையில், இந்த விவகாரத்தில் 5 மாதங்கள் ஆன நிலையில் அலங்கிரிதாவின் விளக்கம் ஏற்புடையதாக இல்லை என அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரபிரதேச அரசு நேற்று உத்தரவிட்டது.

Next Story