“குறுகிய கால போர்களுக்கு தயாராக இருக்க வேண்டும்” - இந்திய விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி


“குறுகிய கால போர்களுக்கு தயாராக இருக்க வேண்டும்” - இந்திய விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி
x
தினத்தந்தி 28 April 2022 3:05 PM IST (Updated: 28 April 2022 3:05 PM IST)
t-max-icont-min-icon

இந்திய விமானப்படையை குறுகிய மற்றும் சிறிய கால நடவடிக்கைகளுக்குத் தயார்படுத்த வேண்டும் என வி.ஆர்.சவுத்ரி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் இன்று நடைபெற்ற கருத்தரங்கில், இந்திய விமானப்படையின் தளபதி வி.ஆர்.சவுத்ரி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், நமது சக்தி, இடம் மற்றும் காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப குறுகிய, வேகமான போர்களுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார், 

அதே போல் கிழக்கு லடாக்கில் நாம் இப்போது பார்ப்பது போன்ற நீண்ட கால மோதலுக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். தற்போதைய புவிசார்-அரசியல் சூழ்நிலையானது, இந்திய விமானப்படையை குறுகிய மற்றும் சிறிய கால நடவடிக்கைகளுக்குத் தயார்படுத்த வேண்டும் என்பதை உணர்த்துவதாக அவர் குறிப்பிட்டார்.

நமது படை மிகவும் பரந்த மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட தளவாடங்களைக் ண்டுள்ளது என்று தெரிவித்த அவர், இத்தகைய அதிக தீவிரம் கொண்ட, குறுகிய கால நடவடிக்கைளை மேற்கொள்ள நாம் தளவாடங்களை கையாளும் விதத்தில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். 
1 More update

Next Story