வெப்ப அலை; 7 மாநிலங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை


வெப்ப அலை; 7 மாநிலங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
x
தினத்தந்தி 29 April 2022 8:00 AM GMT (Updated: 2022-04-29T13:30:27+05:30)

நாட்டில் வெப்ப அலையை முன்னிட்டு 7 மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.புதுடெல்லி,நாட்டில் நடப்பு ஆண்டில் கோடை வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது.  இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் விஞ்ஞானி ஆர்.கே. ஜெனாமணி, நாட்டின் வடமாநிலங்கள் சிலவற்றுக்கு வெப்ப அலையை முன்னிட்டு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுபற்றி அவர் இன்று கூறும்போது, இதன்படி, ஏப்ரல் 29 (இன்று), ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய 3 நாட்கள் மேற்கு ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா, டெல்லி, மேற்கு உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு வெப்ப அலையை முன்னிட்டு மஞ்சள் எச்சரிக்கை விடப்படுகிறது.

இதன்பின்னர் மே 2ந்தேதி முதல் ஒரு மாற்றம் ஏற்படுகிறது.  இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என தெரிவித்து உள்ளார்.

வருகிற மே 2ந்தேதி முதல் 4ந்தேதி வரை ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப் மற்றும் அரியானாவில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  அதனால், வருகிற மே 2ந்தேதி முதல் 4ந்தேதி வரை வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் முதல் 39 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.


Next Story