ஆடைகளில் பாலின வேறுபாடு கிடையாது: தாடி, மீசையுடன் புடவையில் புஷ்பக் சென்


ஆடைகளில் பாலின வேறுபாடு கிடையாது: தாடி, மீசையுடன் புடவையில் புஷ்பக் சென்
x
தினத்தந்தி 30 April 2022 1:21 PM IST (Updated: 30 April 2022 1:21 PM IST)
t-max-icont-min-icon

எனது பாரம்பரியத்தை, எனது தாய்மண்ணி்ன் கலைநயத்தை நான் பிரதிபலிக்க விரும்புகிறேன்

கொல்கத்தா

மேற்கு வங்காளம் கொல்கத்தாவை சேர்ந்தவர் புஷ்பக் சென்( 26) . இவர் பேஷன் டிசைனிங் படிப்பை முடித்தவர். ஆடை விஷயத்தில் நிலவும் பாலின வேறுபாட்டைக் களைய வேண்டும் என்பது அவரது விருப்பமாக உள்ளது. ஆகவே, அவர் சேலை அணியத் தொடங்கினார். அந்த ஆடைகளில் வெளியிடங்களில் நடமாடியும் வருகிறார். அவரை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.

.இதுகுறித்து அவர் கூறியதாவது:-

இதுபோன்ற சவால் மிகுந்த விஷயத்தை ஆன்லைன் தளங்களில் பேசுவது எளிதானது. ஆனால், யதார்த்த உலகில் அந்த தடைகளை தகர்த்து செயலில் காட்டுவது கடினம். ஆகவே தான், இதைப் பேசுவதோடு மட்டுமல்லாமல், அதற்கு நானே எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன்’’ என்றார் புஷ்பக் சென்.

இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பேஷன் துறையில் வளர்ந்து வரும் நபர் என்ற விருது எனக்கு கிடைக்குமா? நான் விருது பெற விரும்புகிறேனா? இல்லை. பின்னர் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன். வங்கத்தை, எனது பாரம்பரியத்தை, எனது தாய்மண்ணி்ன் கலைநயத்தை நான் பிரதிபலிக்க விரும்புகிறேன்’’ என்று கூறியுள்ளார்.



Next Story