தெலுங்கானா: கட்டிடம் இடிந்து 4 பேர் பலி; கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல்


தெலுங்கானா:  கட்டிடம் இடிந்து 4 பேர் பலி; கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல்
x
தினத்தந்தி 30 April 2022 1:49 PM IST (Updated: 30 April 2022 1:49 PM IST)
t-max-icont-min-icon

தெலுங்கானாவில் பழைய கட்டிடம் ஒன்று இடிந்து 4 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்து உள்ளார்.




யாதத்ரி,



தெலுங்கானாவின் யாதத்ரி-போங்கீர் மாவட்டத்தில் பழைய கட்டிடத்தின் மேற்கூரை பகுதிக்கு கீழே 4 பேர் நின்று கொண்டு இருந்துள்ளனர்.  இந்நிலையில், கட்டிடம் திடீரென இடிந்து விழுந்துள்ளது.  இந்த சம்பவத்தில் கட்டிடத்தின் உரிமையாளர், வாடகைக்கு வசிக்கும் ஒருவர் மற்றும் 2 தொழிலாளர்கள் என 4 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்து உள்ளூர்வாசிகள் போலீசாருக்கு விவரம் தெரிவித்து உள்ளனர்.  அவர்கள் உதவியுடன் போலீசார் மீட்பு பணிகளை விரைந்து முடித்துள்ளனர்.  காயமடைந்த நபர்கள் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தெலுங்கானாவில் பழைய கட்டிடம் இடிந்து 4 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இந்த சோக சம்பவம் பற்றி அறிந்து கவர்னர் வருத்தமடைந்து உள்ளார்.  உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொண்டார்.  காயமடைந்த நபர்களுக்கு சிறந்த மருத்துவ சேவையை வழங்கும்படி மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கி உள்ளார்.  மீட்பு பணிகளை விரைந்து முடிக்கும்படியும் கூறியுள்ளார் என தெரிவித்து உள்ளது.

இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story