ஆந்திராவில் தொகுதிக்கு சென்ற எம்.எல்.ஏவை அடித்து விரட்டிய பொதுமக்கள்...!


ஆந்திராவில் தொகுதிக்கு சென்ற எம்.எல்.ஏவை அடித்து விரட்டிய பொதுமக்கள்...!
x
தினத்தந்தி 1 May 2022 9:14 AM IST (Updated: 1 May 2022 9:14 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவில் தொகுதிக்கு சென்ற எம்.எல்.ஏவை பொதுமக்கள் அடித்து விரட்டினர்.

அமராவதி,

ஆந்திராவில் மாநிலத்தின் ஒய். எஸ். ஆர். காங்கிரசின் கோபாலபுரம் தொகுதி எம்.எல்.ஏ தலரி வெங்கட்ராவ்.  இவர் எல்லுரில் படுகொலை செய்யப்பட்ட ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் நிர்வாகியின் வீட்டின்று நேற்று சென்றார். அப்போது அங்கு குவிந்து இருந்த கிராம மக்கள் எம்.எல்.ஏ வெங்கட்ராவை தடுத்தி நிறுத்தினர். 

மேலும் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் நிர்வாகி கொலை சம்பவத்தில் எம்.எல்.ஏ வெங்கட்ராவிற்கும் தொடர்பு இருப்பதாக கூறி அவரை தாக்கி அங்கிருந்து விரட்டி அடித்தனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து போலீலார் கிராம மக்களிடம் இருந்து எம்.எல்.ஏ தலரி வெங்கட்ராவை பாதுகாப்பாக மீட்டு சென்றனர்.

கிராம மக்கள் ஆளும் கட்சி எம்எல்ஏவை விரட்டி அடித்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



 

Next Story