பிரதமர் மோடியின் 8 ஆண்டு கால மோசமான ஆட்சி; ராகுல் காந்தி கடும் தாக்கு


பிரதமர் மோடியின் 8 ஆண்டு கால மோசமான ஆட்சி; ராகுல் காந்தி கடும் தாக்கு
x
தினத்தந்தி 2 May 2022 12:50 PM IST (Updated: 2 May 2022 12:50 PM IST)
t-max-icont-min-icon

கடந்த 8 ஆண்டுகால ஆட்சியில் பிரதமர் மோடியின் தவறான நிர்வாகத்தால் பொருளாதாரம் எப்படி சீர்குலைந்தது என்பதை கொண்டு ஆய்வுப் படிப்பே மேற்கொள்ளலாம் என ராகுல் காந்தி சாடியுள்ளார்.

புதுடெல்லி,

மத்தியில் ஆளும் மோடி அரசை அவ்வப்போது காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி கடுமையாக சாடி வருகிறார். அந்த வகையில், ராகுல் காந்தி இன்று வெளியிட்ட டுவிட் பதிவில், கடந்த 8 ஆண்டுகால ஆட்சியில் பிரதமர் மோடியின் தவறான நிர்வாகத்தால் பொருளாதாரம் எப்படி சீர்குலைந்தது என்பதை கொண்டு ஆய்வுப் படிப்பே மேற்கொள்ளலாம் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார். 

இது தொடர்பாக ராகுல் காந்தி தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “  மின் நெருகடி, வேலை நெருக்கடி, விவசாயிகள் நெருக்கடி, பணவீக்கம் நெருக்கடி.. ஒரு காலத்தில் உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இருந்த நாட்டை, தனது மோசமான ஆட்சி நிர்வாகத்தால் மோடி அரசு எவ்வாறு அழித்தது என்பது குறித்து ஒறு ஆய்வு படிப்பையே மேற்கொள்ளலாம்”என சாடியுள்ளார். 

Next Story