மாற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் உடலை சுடுகாட்டில் தகனம் செய்ய எதிர்ப்பு - அதிர்ச்சி சம்பவம்


மாற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் உடலை சுடுகாட்டில் தகனம் செய்ய எதிர்ப்பு - அதிர்ச்சி சம்பவம்
x
தினத்தந்தி 2 May 2022 3:37 PM IST (Updated: 2 May 2022 3:37 PM IST)
t-max-icont-min-icon

மாற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் உயிரிழந்தவர் உடலை சுடுகாட்டில் தகனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் குனா மாவட்டம் சந்திபுரா கிராமத்தை சேர்ந்தவர் கண்ணையா அகிர்வார். 70 வயதான இவர் வயது முதிர்வு காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்துவிட்டார். இதனை தொடர்ந்து அவரது உடலை உறவினர்கள் அந்த கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் தகனம் செய்ய கொண்டு வந்தனர்.

அப்போது, அந்த கிராமத்தை சேர்ந்த மாற்று சமூகத்தினர் சிலர் கண்ணையாவின் உடலை ஊர் சுடுகாட்டில் தகனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். கண்ணையா மாற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது உடலை சுடுகாட்டில் தகனம் செய்ய சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால், கண்ணையாவின் உடலை சுடுகாட்டிற்கு அருகே உள்ள இடத்தில் குடும்பத்தினர் தகனம் செய்துள்ளனர். இந்த சம்பவத்தை சிலர் வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் மாற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்த அதேகிராமத்தை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர்.  

Next Story