வேறொரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்ததை கண்டித்ததால் மனைவியை கொலை செய்த நபர்
வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததை கண்டித்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் ராம்பூர் பகுதியை சேர்ந்தவர் சோஹன்லால். இவருக்கு திருமணமாகி 33 வயதில் மனைவி உள்ளார்.
இதற்கிடையில், சோஹன்லாலுக்கு அதேபகுதியை சேர்ந்த வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. இதனை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் நிலவி வந்துள்ளது.
இந்நிலையில், வேறொரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்தது தொடர்பாக சோஹன்லாலுக்கும் அவரது மனைவிக்கும் இடையே நேற்று மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் சொஹன்லால் அவரது மனைவியை கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து, சொஹன்லால் வீட்டில் இருந்து தப்பியோடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து பெண்ணின் தந்தை போலீசில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த சொஹன்லாலை கைது செய்தனர்.
மேலும், இந்த சம்பவத்தில் சொஹன்லாலின் தந்தை, சகோதரனுக்கு தொடர்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் தலைமறைவாக உள்ள அந்த இருவரையும் கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
Related Tags :
Next Story