கொரோனா தடுப்பூசி போட கட்டாயப்படுத்த கூடாது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
கொரோனா தடுப்பூசி போடுமாறு யாரையும் கட்டாயப்படுத்த கூடாது என்றும், பொது இடங்களுக்கு செல்வதற்கான கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்றும் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
புதுடெல்லி,
கொரோனா தொற்றை தடுப்பதற்காக கடந்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
கொரோனா தடுப்பூசி
சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு அதிக அளவில் செலுத்தப்பட்டன.
கொரோனா உச்சத்தில் இருந்த சமயத்தில் நோய் பரவலை தடுப்பதற்காக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் பொதுஇடங்களுக்கு செல்லவும், பொது போக்குவரத்தை பயன்படுத்தவும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தடை விதித்தன.
பொதுநல மனு
இதற்கிடையே தடுப்பூசி திட்டத்துக்கான தேசிய ஆலோசனைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் டாக்டர் ஜேக்கப் புலியல் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அதில் ‘கொரோனா தடுப்பூசிக்கான மருத்துவ ரீதியாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள், இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசியின் பலன்கள் போன்ற விவரங்களை மத்திய அரசு வெளியிட உத்தரவிட வேண்டும்.
தமிழகம், மராட்டியம், மத்தியபிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளதை ரத்து செய்து அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது என அறிவிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
தீர்ப்பு
இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்து தீர்ப்பு அளித்தது.
தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
கட்டாயப்படுத்த கூடாது
தற்போதுள்ள ஆதாரங்களையும், நிபுணர்களின் கருத்துகளையும் வைத்து பார்க்கும்போது மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை அறிவுக்கு ஒவ்வாதது என கூற முடியாது. மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை ஒருதலைப்பட்சமானது இல்லை.
உடல் சார்ந்த உரிமை அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டு உள்ளதால், தடுப்பூசி செலுத்திக்கொள்ள யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது. ஆனால் பொதுமக்கள் நலன் கருதி, அரசு கொள்கையை உருவாக்கி கட்டுப்பாடுகளை விதிக்கலாம்.
தடுப்பூசியை செலுத்தி கொள்ளாதவர்களை பொது இடங்களில் அனுமதிக்க மறுக்கும் கட்டுப்பாடுகள் இருந்தால் அவற்றை மாநில அரசுகள் நீக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி சோதனை, தீயவிளைவுகள் குறித்த தரவுகளை மத்திய அரசு பொதுவெளியில் வெளியிட வேண்டும்.
குழந்தைகளுக்கான தடுப்பூசி
குழந்தைகளுக்கு செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசியை பொருத்தவரை, சர்வதேச தரத்திற்கு ஏற்றவாறு செலுத்தும் முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி சோதனை குறித்த தரவுகளையும் மத்திய அரசு விரைவில் வெளியிட வேண்டும்.
தமிழகம், மராட்டியம், மத்திய பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை முடித்து வைக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story