ரம்ஜான் பண்டிகை: எல்லையில் இந்தியா- பாகிஸ்தான் வீரர்கள் இனிப்புகள் பரிமாற்றம்


ரம்ஜான் பண்டிகை: எல்லையில் இந்தியா- பாகிஸ்தான் வீரர்கள் இனிப்புகள் பரிமாற்றம்
x
தினத்தந்தி 3 May 2022 5:12 PM IST (Updated: 3 May 2022 5:12 PM IST)
t-max-icont-min-icon

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு எல்லையில் பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர்.

புதுடெல்லி,

பாகிஸ்தான் மற்றும் வங்காளதேச எல்லைகளில் பாதுகாப்பு பணியில் எல்லை பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். முக்கிய பண்டிகை நாட்களில்  எல்லையில் உள்ள வீரர்கள் அண்டை நாட்டு வீரர்களுடன் இனிப்புகளை பரிமாறிக்கொள்வது வழக்கம். 

அந்த வகையில், ரம்ஜான் பண்டிகை தினமான இன்று இனிப்புகள் பரிமாறிக்கொண்டனர்.  ஜம்மு எல்லைகளான சம்பா , கதுனா, ஆர் எஸ் புரா, அக்னூர்  எல்லைகளிலும் இனிப்பு பரிமாற்றம்  நடந்தது. 

இந்திய எல்லை வீரர்கள் அந்த நாட்டு வீரர்களூக்கும் அந்த நாட்டு வீரர்கள் நமது நாட்டு வீரர்களூக்கும் இனிப்புகள் பரிமாறிக்கொண்டனர். இந்தியாவின் கிழக்குப் பகுதியான  வங்காளதேச   எல்லை பாதுகாப்பு படையினர்  இடையே இதேபோன்ற இனிப்புகள் பரிமாறப்பட்டது. 



Next Story