டெல்லியில் நாளை புழுதிப்புயலுக்கு வாய்ப்பு
டெல்லியில் நாளை புழுதிப்புயலுக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து மக்களை வாட்டி வருகிறது. இந்த நிலையில், நாளை புழுதிப்புயலுக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் கூறியுள்ளது.
கடந்த சில நாட்களாக 40 டிகிரி செல்சியசுக்கு மேல் பதிவாகி வந்த வெப்பநிலையானது, இன்று சற்று தணிந்து 38.4 டிகிரி செல்சியசாக பதியாகியுள்ளது. டெல்லியில் அடுத்த இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு வெப்ப அலைகள் இருக்காது என்று வானிலை அதிகாரி ஒருவர் கூறினார்.
Related Tags :
Next Story